ஞாயிறு, 10 ஜூலை, 2016

தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்


*தினமும் 3நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்*
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும்.நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.


தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.


இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் மூலாதாரத்தில் -சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்தசோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறுஎந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

நன்றி
Akilandeshwari Muthaiah

ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஆடவர் சுய உதவி குழு தொடக்க விழா



தொடக்க விழா:-
சிவகிரி ரேடியோ ஆடவர் சுய உதவி குழு. (அனுபவ கல்விக்கான கூட்டமைப்பு)
முதல் கூட்ட அழைப்பிதழ்.
03.07.2016 அன்று மாலை 6 மணிக்கு அனைவரும் சிவகிரி நூலகம் வருக.
குழுவின் நோக்கங்கள்....
1. பள்ளி- கல்லூரி- நூலகக் கல்வியுடன் அனுபவக் கல்வியை ஒருங்கிணைத்தல்.
2. நவீன அறிவியல் சாதனங்கள்/ ஊடகங்களை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்துதல்.
3. வளரிளம் பருவத்தினரின் திறமைகளை வளர்த்தல்.
4. விளிம்பு நிலை மக்களுக்கும் தொழில் நுட்பக் கல்வியை விரிவுபடுத்துதல்.
5. வீட்டுக்கு ஒருவரையாவது பொது நூலக உறுப்பினர் ஆக்குதல்.
6. சமூக சேவகர்களோடு ஒருங்கிணைந்து கூட்டமைப்பாக செயலாற்றுதல்.
7. மனிதகுல வளர்ச்சிக்கான அனுபங்களை சேகரித்தல், பாதுகாத்தல், பரப்புதல்.
8. கற்போம் கற்பிப்போம் கோட்பாட்டில் வளங்களை ஒருங்கிணைத்தல்.
9. கலை இலக்கிய பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.
10. சந்தா - நன்கொடைகளை குழுவின் வங்கி கணக்கு மூலம் பராமரித்தல்.
Canara bank account Name:- Sivagiri radio aadavar selp help group.
Account No:- 1030101039222.
Sivagiri IFSC:- CNRB0001030.
11. வரவு- செலவு அறிக்கைகளை இணையத்தில் வெளியிடுதல்.
12. ஆடவர் குழுவுக்கான வங்கிக் கடன் / சலுகைகள் உள்ளீட்ட பணப்பயன்களை நிராகரித்தல்.
13. கூட்டமைப்புக்கான மாதாந்திர கூட்டம் சிவகிரி நூலகத்தில் பிரதி மாதம் முதல் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு அனைவரும் வருக.
14. சிவகிரி நூலக வாசகர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நாள் முழுவதும் வழங்கி வரும் அதி வேக இண்டர் நெட் இலவச உபயோகத்தை தொடர்தல்.
பொறுப்பாளர்கள் விபரம்.
(படத்தில் இருப்பவர்)
தலைவர் திரு.SR.ஈஸ்வரன். அவர்கள். நுகர் பொருள் வணிகர், பாரதி தெரு, சிவகிரி -638 109.
செயலாளர் கு.முருகபூபதி,
பொருளாலர் கிங் செஸ் மணி.
அனைவரும் வருக.
உதவிக்கு:- 9865046197.

தோழர் ஆறுமுகம் காலமானார்

கொடுமுடியில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியாக திகழ்ந்த தோழர் ஆறுமுகம் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த தோழர் ஆறுமுகம் ஜூலை- 1 ம் தேதி கொடுமுடி அக்கிரஹார வீதியில் அவரது இல்லத்தில் மரணமடைந்தார். 

கட்சியில் கொடுமுடி ஒன்றிய செயலாளராக, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக, தொழிற்சங்க தலைவராக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்… சிறந்த பேச்சாளர்…ஜனசக்தி நாளிதழில் அவ்வப்போது கட்டுரைகளை எழுதுவார் மக்களுக்கான ஏராளாமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் என உழைக்கும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடியவர் தோழர் ஆறுமுகம். 

சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக கொடுமுடி பகுதியில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி அதன் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டவர். தோழரின் மறைவு இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி